அவரு ரொம்ப நல்ல தம்பி! அண்ணாமலைக்கு எதிரா யாராவது வாய் திறந்தீங்க...! ஈபிஎஸ் போட்ட திடீர் கண்டிஷன்

Published : Aug 30, 2025, 04:46 PM IST

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்தோ, கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலோ யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

PREV
14
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை, ராயபேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 82 மாவட்டச் செயலாளர்கள் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

24
அண்ணாமலை குறித்து வாய் திறக்காதீர்கள்

குறிப்பாக அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதால் கூட்டணிக்குள் பிளவு ஏற்படும் வகையில் யாரும் கருத்து சொல்லக் கூடாது. பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தற்போது நம்மை பற்றி எதுவும் பேசவில்லை. அப்படி இருக்கையில் நீங்களும் அவரைப் பற்றி எதுவும் பேசக் கூடாது.

34
விஜய்யின் பேச்சை கண்டுகொள்ளாதீர்கள்

நடிகர் விஜய் அண்மையில் தான் கட்சி தெடங்கி உள்ளார். அவர் தனது தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக எதையாவது பேசிக்கொண்டு இருப்பார். அவர் பேசுவதை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள். அவர் கருத்துகளுக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்காமல் நமது பயணத்தை வேகப்படுத்தும் வேலையில் ஈடுபடுங்கள்.

44
தேர்தல் களம் நமக்கு சாதகமாக உள்ளது

2026 சட்டமன்ற தேர்தல் களம் நமக்கு சாதகமாக உள்ளது. அதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் செய்ய வேண்டிய பணி இன்னும் அதிகம் உள்ளது. திமுக ஆட்சியில் உள்ள குறைபாடுகளை மக்களிடம் எடுத்துக் கூறி நமக்கு வாக்கு சேகரியுங்கள் என்று உத்ததரவிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories