தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பேராலயத்தின் 442-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
24
Thoothukudi Local Holiday
இந்நிலையில் விழாவின் இறுதி நாளில் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனி ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.