வீக் எண்ட் விடுமுறை! சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு டென்ஷன் இல்லாமல் போகலாம்! போக்குவரத்துறை அதிரடி ஏற்பாடு!

First Published Jul 26, 2024, 11:40 AM IST

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கபட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Special Buses

வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் தமிழக போக்குவரத்துத்துறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் சொந்த ஊர் செல்லவும் ஆன்மிக தலங்களுக்கு செல்லவும் சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக வார இறுதி நாட்களிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வாரமும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Transport Department

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்: 26ம் தேதி வெள்ளிக்கிழமை 27ம் தேதி (சனிக்கிழமை) 28ம் தேதி (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: Kathipara Bridge: ஷாக்கிங் நியூஸ்.. சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை!

Latest Videos


Weekend Special Buses

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 260 பேருந்துகளும், சனிக்கிழமை 290 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  Today Gold Rate In Chennai: தாறுமாறாக குறையும் தங்கம்.. 4 நாட்களில் ரூ. 3,360.. இன்றைய நிலவரம் என்ன?

Government Buses

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 65 பேருந்துகளும் நாளை மறுநாள் 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு  செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!