Thiruthani Temple : திருத்தணி கோயிலுக்கு போறீங்களா.? தரிசன கட்டணம் திடீர் குறைப்பு.! எவ்வளவு தெரியுமா.?

First Published | Jul 26, 2024, 11:31 AM IST

 திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா நாட்களில் சிறப்பு வழி தரிசன கட்டணம் ரூ.200/- லிருந்து  100 ரூபாயாக குறைத்து  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். 
 

sekar babu

ஆடி மாத கோயில் திருவிழாக்கள்

ஆடி மாதங்களில் பல்வேறு கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும். குறிப்பாக ஆடி அமாவசையையொட்டி ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கான சிறப்பு பூஜை போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இதே போன்று முருகனின் அறுபடை வீடுகளிலும் விஷேசங்கள் நடைபெறும். பழனி, திருத்தனி உள்ளிட்ட கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். 

thiruthani murugan

திருத்தணி கோயில்- ஆடிக்கிருத்திகை

இந்தநிலையில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடு என்று போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 தேதிகளில் நடைபெறும் திருப்படி திருவிழாவிற்கு தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்தாண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா 27:07.2024 முதல் 31,07, 2024 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

Tap to resize

தரிசனக் கட்டணம் குறைப்பு

இத்திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் திரு. ஆர்.காந்தி மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் 23. 07.2024 அன்று ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படித் திருவிழா ஆகிய இரண்டு திருவிழாக்களின்போது சிறப்பு வழி தரிசனக் கட்டணம் ரூ.200/- ஐ குறைத்திட வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை வைக்கப்பட்டது.

200 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக குறைப்பு

இதன்  அடிப்படையில் திருக்கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி கட்டணத்தை மாற்றி அமைத்திட திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அரசின் அனுமதி கோரப்பட்டிருந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா நாட்களில் சிறப்பு வழி நுழைவுக் கட்டணம் ரூ. 200/- ஐ குறைத்து ரூ 100/-ஐ தடைமுறைப்படுத்திட ஆணையிடப்பட்டுள்ளது 

Latest Videos

click me!