Mettur Dam : தமிழகத்தை நோக்கி பொங்கி வரும் ஒரு லட்சம் கன அடி நீர்!!கிடு,கிடுவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்

First Published Jul 26, 2024, 9:16 AM IST

கர்நாடக அணைகளில் இருந்து ஒரு லட்சம் கன அடி அளவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தமிழக எல்லையான பில்லிகுண்டில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 93 அடியை தாண்டி கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.
 

பொங்கி வரும் காவிரி

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி  குடகு, பெங்களூரு ஆகிய இடங்களை கடந்து  தமிழகத்திற்குள் வருகிறது. தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவில் இருந்து ஒக்கேனக்கல் தருமபுரி, சேலம் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது.

மேட்டூர் அணை டெல்டா பகுதி விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரால்  டெல்டா பாசன பகுதிகளில் உள்ள  12 மாவட்டங்கள் பயன்பெறுவார்கள்.

முழு கொள்ளளவை எட்டிய கர்நாடக அணைகள்

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தற்போது பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக நீர் பிடிப்பு பகுதியில் வேகமாக தண்ணீர் நிரம்பி வருகிறது. ஹேமங்கி அணை தனது முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அங்கிருந்து கேஆர்எஸ் அணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையும் தனது 124 அடியை எட்டியதையடுத்து நேற்று மாலை முதல் கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது.

Latest Videos


KRS DAM WATER LEVEL

ஒரு லட்சம் கன அடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தற்போது ஒரு லட்சம் முதல் 1.05 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கான நீர் வரத்து உயர்ந்துள்ளது.  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 74,000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்து உள்ளது.  இதனால் காவிரி கரையோர பகுதி பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tomato Price : திடீரென பாதியாக குறைந்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ இவ்வளவு தானா.?
 

Kabini Dam

கிடு, கிடுவென உயரும் மேட்டூர் அணை

இந்தநிலையில் மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து வினாடிக்கு 32,693 கன அடியிலிருந்து 45,598 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 92.62 அடியாகவும்,  நீர் இருப்பு 55.69 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து  குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து ஒரு லட்சம் கன அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கப்படவுள்ளது. எனவே மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரு சில நாட்களில் 100 அடியை கடக்கும் என கூறப்படுகிறது. 

click me!