JOB: இளைஞர்களுக்கு அரசு வேலை.!காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு-எத்தனை இடங்கள் தெரியுமா.?

First Published Jul 26, 2024, 1:02 PM IST

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகள் சார்ந்த துறைகளில் உள்ள உதவிப் பொறியாளர், வேதியியலாளர், புவியியலாளர் உள்ளிட்ட காலியாக உள்ள 654 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று முதல் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
 

அரசு பணிக்கு அழைப்பு

தமிழக அரசு பணியில் காலியாக உள்ள இடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த வகையில் குரூப்1 குரூப் 2 குரூப் 3 மற்றும் குரூப் 4 என பதவியிடங்களுக்கு ஏற்றவகையில் தேர்வு நடத்தப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து  595 பணியிடங்களும்,  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் என 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

75ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும்

இது மட்டுமில்லாமல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சமூக நலத்துறை, உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும். இவற்றை மொத்தமாக சேர்த்து75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்  நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஏற்றார் போல் பல துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

Latest Videos


ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள்

அந்த வகையில் தற்போது உதவிப் பொறியாளர், புவியியலாளர் , வேதியியலாளர், உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி இன்று முதல் (ஜூலை 26ஆம் தேதி )  விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எத்தனை இடம்.? எப்போது விண்ணப்பிக்கலாம்?

மொத்தம் 654 பணி இடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கு இன்று முதல் அதாவது ஜூலை 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 இதனையடுத்து அக்டோபர் 14 முதல் 23ஆம் தேதி வரை  உதவிப் பொறியாளர், புவியியலாளர் , வேதியியலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

tnpsc 2

கூடுதல் தகவல்களை பெற

உதவிப் பொறியாளர், புவியியலாளர் , வேதியியலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==
 என்ற இணையதள முகவரியில் தங்கள் பதிவு செய்ய வேண்டும்

டிஎன்பிஎஸ்சியின் இந்த தேர்வு முறை தொடர்பாக தெரிந்து கொள்ள

 https://tnpsc.gov.in/Document/tamil/09_2024_CTS_NONOT_TAMIL_.pdf என்ற இணைப்பில் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்  

click me!