மழை வெள்ளத்தால் பள்ளிகள் பாதிப்பு
ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் படி,
1. ஃபெங்கல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு அறிக்கை தங்கள் மாவட்ட கண்காணிப்பு அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்.
2. பள்ளி வளாகம் ,மைதானம் மற்றும் வகுப்பறைகளில் மழைநீர் தேங்கியிருப்பின் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பினை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பயன்பட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.