தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து செப்டம்பர் 28ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்கி அக்டோபர் 6ம் தேதி வரை நிறைவு பெற்றது. இதனையடுத்து பள்ளிகள் திங்கள் கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலாண்டு தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தம் செய்து பள்ளி திறக்கும் அன்றைய தினமே மாணவர்களுக்கு விடைத்தாள்களை வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வு மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் அக்டோபர் 15-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
24
School Education Department
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வில் 6 முதல் 8-ம் வகுப்பிற்கான முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்.
விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி/ காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை(100 மதிப்பெண்) பாட வாரியாக அக்டோபர் 15-ம் தேதிக்குள் பதிவு செய்வது எமிஸ் தளத்தில் உள்ளிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 6 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது சார்ந்த விவரத்தினை தெரியப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.