School: பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்! காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? மொத்தம் 155 நாட்கள் லீவு!

Published : Jun 16, 2026, 10:18 AM IST

School Calendar 2026-27: பள்ளிக் கல்வியின் 2026-27ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதில், மொத்த வேலை நாட்கள், பொது விடுமுறை எத்தனை நாட்கள் மற்றும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எப்போது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PREV
16
பள்ளிக் கல்வியின் 2026-27 நாட்காட்டி

விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அளவில்லா சந்தோஷம் தான். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பள்ளிக் கல்வியின் 2026-27ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதில், மொத்த வேலை நாட்கள், பொது விடுமுறை எத்தனை நாட்கள் மற்றும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எப்போது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

26
வேலை நாட்கள் 210

அதில், 2026-27ம் கல்வியாண்டில் மொத்தம் 365 நாட்களில் வேலை நாட்கள் 210 நாட்களும், விடுமுறை நாட்கள் என்று பார்த்தால் 155 நாட்களாகும். இதில், ஜூலை 19, செப்டம்பர் 19, டிசம்பர் 19 ஆகிய மூன்று சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

10th Public Exam Answer Sheet Copy: மாணவர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! இன்று முதல் ஜூன் 23 வரைக்கும் டைம்! முக்கிய அறிவிப்பு வெளியானது!

36
பொது விடுமுறை நாட்கள்

ஜூன் 26 மொஹரம் பண்டிகை, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 26 மிலாடி நபி, செப்டம்பர் 04 கிருஷ்ண ஜெயந்தி, செப்டம்பர் 14 விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 19 ஆயுத பூஜை, அக்டோபர் 20 விஜய தசமி, நவம்பர் 8 தீபாவளி, டிசம்பர் 21 கிறிஸ்துமஸ், ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 15 பொங்கல், ஜனவரி 16 திருவள்ளுவர் தினம் , ஜனவரி 17 உழவர் திருநாள், ஜனவரி 23 தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 10 ரம்ஜான், மார்ச் 26 புனித வெள்ளி, ஏப்ரல் 04 தெலுங்கு வருடப்பிறப்பு, ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள், ஏப்ரல் 19 மகாவீர் ஜெயந்தி உள்ளிட்ட விடுமுறைகள் வருகின்றன. 2026-27ம் கல்வியாண்டில் மொத்தம் 20 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. ஜனவரி மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 6 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. இதில், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது.

46
காலாண்டுத் தேர்வு

காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 17 முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. பின்னர் 26ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை காலாண்டு விடுமுறை வருகிறது. மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

56
அரையாண்டுத் தேர்வு

அதேபோல் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15 முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. பின்னர் டிசம்பர் 24 முதல் 2027 ஜனவரி 3ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

66
கோடை விடுமுறை எப்போது

முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 7 முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. பள்ளி கடைசி வேலை நாள் 23ம் தேதியாகும். ஏப்ரல் 24ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories