பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இலவசமாகவே பயணிக்கலாம்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Published : May 30, 2025, 07:46 PM IST

ஜூன் 2 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். 2024-25 கல்வியாண்டிற்கான பழைய பயண அட்டையைப் பயன்படுத்தியும் மாணவர்கள் பயணிக்கலாம்.

PREV
14

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகிற ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து கல்லூரியில் வகுப்புகளும் தொடங்கப்டவுள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 02.06.2025 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும். அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும்.

24

2025-26 கல்வியாண்டில் மாணவர் /மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி / கல்லூரியிலேயே அவர்களின் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அதற்குன்டான கால அளவினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை, பள்ளி மாணவ/மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து

34

தாம் பயிலும் பள்ளி வரையிலும் சென்று வருவதற்கு, அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் 2024-25 கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

44

மேலும் பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ மற்றும் மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories