இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று காலை 9.30 மணிக்கு திருப்பூர், கோவை, நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அடுத்த மாத இறுதிக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும், திண்ணை பிரச்சாரங்கள் மூலம் அதிமுக செய்த சாதனைகளையும் திமுக அரசின் தவறுகளையும் பொதுமக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். மேலும், மாநிலங்களவை பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.