சம்பளம் உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது.. யாருக்கெல்லாம் தெரியுமா?

Published : Feb 04, 2026, 01:07 PM IST

Salary Hike: தமிழ்நாட்டில் கிராமப்புற தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தூய்மைக் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மதிப்பூதியத்தை அதிரடியாக  உயர்த்தியுள்ளது.

PREV
15
கிராம ஊராட்சிகள்

தூய்மைக் காவலர்கள் என்பது தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகளில் (பஞ்சாயத்துகளில்) தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களைக் குறிக்கும் பெயராகும். இவர்கள் தூய்மை பாரத் திட்டத்தின் கீழ் 150 வீடுகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள். ஊரகப் பகுதிகளில் குப்பை சேகரிப்பு, தெரு சுத்தம், சுகாதாரப் பராமரிப்பு போன்ற பணிகளைச் செய்கிறார்கள். இவர்களின் பணி மிக முக்கியமானது கிராமங்களை சுத்தமாகவும், நோயற்றதாகவும் வைத்திருப்பதில் இவர்களின் பங்கு பெரியது. கொரோனா காலத்தில் இவர்கள் "கண்ணுக்குத் தெரியாத அரக்கனை" எதிர்த்து முன்னணியில் பணியாற்றியவர்களாகப் போற்றப்பட்டனர்.

25
தூய்மை காவலர்

தமிழகத்தில் 12,524 கிராமப் பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, 150 வீடுகளுக்கு ஒரு தூய்மை காவலர் தேவை என்ற அவுட்சோர்சிங் அடிப்படையில் 66,025 தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தூய்மை காவலர்கள் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

35
திடக்கழிவு மேலாண்மையில் தூய்மை காவலர்கள்

சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து உரமாக்குதல், நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புதல் மற்றும் ஊராட்சிப் பகுதிகளைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றனர். இதற்காக தூய்மைக் காவலர்களுக்கு மூன்று சக்கர வாகனங்கள், மின் வாகனங்கள், குப்பை சேகரிக்கும் தொட்டிகள் மற்றும் கையுறைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் திடக்கழிவு மேலாண்மையில் தூய்மை காவலர்களின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

45
ஊதியத்தை அதிகரிக்க கோரிக்கை

அந்த வகையில் இவர்களது மதிப்பூதியம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், தங்களது ஊதியத்தை அதிகரித்து தரவேண்டும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அந்த வகையில் தான் சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பில், தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக கூடுதலாக ரூ.112 கோடி ஒதுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

55
சம்பள உயர்வு

இந்நிலையில் 5000 ரூபாய் மதிப்பூதியம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் இதனை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் 5000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன் இதற்காக ரூ.417 கோடி கூடுதல் நிதியையும் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்படுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories