விலை ரொம்ப கம்மி.. ஒரே நாளில் இத்தனை இடங்களா? மிஸ் பண்ணாதீங்க

Published : Feb 04, 2026, 12:34 PM IST

ஐஆர்சிடிசி வழங்கும் இந்த ஒருநாள் சுற்றுலா, குறைந்த பட்ஜெட்டில் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் மற்றும் மகாபலிபுரத்திற்கு அழைத்துச் செல்கிறது. இதன் விலை, அம்சங்கள் போன்றவற்றை விரிவாக இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

PREV
14
ஐஆர்சிடிசி ஒருநாள் சுற்றுலா

ஐஆர்சிடிசி வழங்கும் காஞ்சி–மகாபலிபுரம் ஒருநாள் சுற்றுலா குறைந்த பட்ஜெட்டில் தென்னிந்தியாவின் வரலாறு ஆன்மீகமும் ஒன்றாக அனுபவிக்க விரும்புவோருக்கு சிறந்த வாய்ப்பாக உள்ளது. ஒருவருக்கு ரூ.1980 முதல் தொடங்கும் இந்த பேக்கேஜ், பணச்சுமை இல்லாமல் பயணிக்க நினைப்பவர்களுக்கு ஏற்றதாக உள்ளது. காலை 6 மணிக்கு சென்னை நகரத்தில் இருந்து பயணம் தொடங்கி, முழுக்க முழுக்க ஏசி வசதியுள்ள வாகனத்தில் சுற்றுலா நடத்தப்படுகிறது.

24
காஞ்சிபுரம் மகாபலிபுரம் டூர்

முதலில் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவது காஞ்சிபுரம். இங்கு பஞ்சபூத தலங்களில் பூமியை குறிக்கும் புகழ்பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவில்-இல் தரிசனம் செய்யலாம். மிகப் பெரிய ராஜகோபுரம், ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த வரலாறு ஆகியவை இந்தக் கோயிலுக்குத் தனிச்சிறப்பை அளிக்கின்றன. அதனைத் தொடர்ந்து 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சக்தி பீடமான காமாட்சி அம்மன் கோவிலுக்கு பயணம் தொடர்கிறது. தங்கக் கோபுரம் மற்றும் ஆன்மீக அமைதி இந்த கோயிலை பக்தர்களுக்கு மனநிறைவாக மாற்றுகிறது.

34
சென்னை ஒருநாள் பயணம்

காஞ்சிபுரத்தில் மதிய உணவிற்குப் பிறகு, பல்லவர்கள் காலத்தில் முக்கிய துறைமுக நகரமாக இருந்த மகாபலிபுரம் நோக்கி பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு போன்ற சிற்ப அதிசயங்களை நேரில் காணலாம். கல்லில் செதுக்கிய இந்த படைப்புகள் இந்திய வரலாற்றின் பொற்காலத்தை நினைவுபடுத்துகின்றன.

44
கோயில் சுற்றுலா பேக்கேஜ்

இந்த சுற்றுலா பேக்கேஜ் அனைத்து நாட்களிலும் கிடைக்கும் மற்றும் சாலை வழியாக இயக்கப்படுகிறது. 1 முதல் 3 பேர் வரை பயணித்தால் செடான் கார், 4 முதல் 6 பேர் வரை இன்னோவா போன்ற வாகனங்கள் வழங்கப்படுகின்றன. இரவு 10 மணிக்கு சென்னை திரும்புவதுடன் சுற்றுலா நிறைவடைகிறது. குறைந்த நேரத்தில், குறைந்த செலவில், ஆன்மீகமும் வரலாறும் கலந்த ஒரு முழுமையான அனுபவத்தை இந்த ஒருநாள் சுற்றுலா வழங்குகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories