அன்புமணியை பழி வாங்கணும்..! ஆத்திரத்தில் ராமதாஸ் எடுத்த அதகள முடிவு..!

Published : Feb 04, 2026, 11:25 AM IST

ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைய பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு காரணமாக திமுக கதவை சாத்தி விட்டது.

PREV
14

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பிரிவு என்.டி.ஏ கூட்டணியில் இணைந்து விட்டது.

ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைய பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு காரணமாக திமுக கதவை சாத்தி விட்டது.

24

எனவே,நடிகர் விஜயின் தவெகவுடன் ராமதாஸ் தரப்பு, கூட்டணி பேச்சு நடத்தியது. ஆனால், பட்டியலின மக்களின் ஆதரவை இழக்க நேரிடும் என பலர் எச்சரித்ததால், தவெகவும் ராமதாஸை கூட்டணியில் சேர்க்க தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால், எந்த கூட்டணியிலும் சேர முடியாத நிலைக்கு ராமதாஸ் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், ராமதாஸை குறைந்தது 30 தொகுதிகளில் தனித்து போட்டியிட வைக்க, திமுக காய் நகர்த்தி வருகிறது. அப்படி செய்தால், ராமதாஸ் விரும்பும் ஒன்றிரண்டு நபர்களை வெற்றி பெற வைக்கிறோம் எனவும் திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தைலாபுரம் வட்டாரங்கள் கூறுகின்றன.

34

இது குறித்து, ராமதாஸ் ஆதரவு பாமக நிர்வாகிகள் கூறுகையில் ‘‘தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க, போட்டி போடுகின்றனர். ஆனால், தன்னை யாரும் கண்டுகொள்ளாதது ராமதாசுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். எனவே, அதிமுக கூட்டணியில் அன்புமணிக்கு ஒதுக்கும் தொகுதிகள் உட்பட 30 தொகுதிகளில், தன் தரப்பு வேட்பாளர்களை நிறுத்த ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்’’ என்கிறனர்.

44

ராமதாஸ் தரப்பு வட மாவட்டங்களில் வன்னியர் பெரும்பான்மை உள்ள தொகுதிகளில் தனித்து தனது ஆதரவாளர்களை களமிறக்கி போட்டியிட திட்டமிட்டுள்ளதன் மூலம் அன்புமணி தரப்பு போட்டியிடும் தொகுதிகளில் வாக்குகளை பிரிக்க முயல்வதாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories