ஜனவரியில் குஷியில் இருந்த மாணவர்களுக்கு பிப்ரவரியில் அதிர்ச்சி! வெளியான முக்கிய அறிவிப்பு!

Published : Feb 04, 2026, 10:22 AM IST

திருவாரூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜனவரி மாதம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்ரவரி 7ம் தேதி முழு வேலை நாளாக அறிவிப்பு.

PREV
15
திருவாரூர் மாவட்டம் உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உலக பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். மேலும் இந்த விடுமுறை ஈடுசெய்யும் விதமாக பிப்ரவரி 07ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

25
கரூர் மாவட்டம்

அதேபோல் தென் திருப்பதி என அழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயிலுக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி 28ம் தேதி புதன்கிழமை கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

35
பிப்ரவரி 7ம் தேதி

இதற்காக உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் கரூர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 7ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

45
புதுக்கோட்டை மாவட்டம்

அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் ஜனவரி 28ம் தேதி நடைபெற்றதை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும், அதே நாளில் அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த தேர்வுகளுக்கு சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும், அத்தியாவசிய பணிகளுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது.

55
பிப்ரவரி 7 பள்ளி வேலை நாள்

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 7ம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிப்ரவரி 7ம் தேதி சனிக்கிழமை அன்று திருவாரூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி முழு நேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. ஜனவரி மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் ஆரம்பமே பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories