School Student: பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500! விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது? வெளியான தகவல்!

First Published | Sep 19, 2024, 1:33 PM IST

School Students: தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் தமிழ் மொழித்திறன் மேம்படுவதுடன், உயர்கல்விக்கும் ஊக்கம் அளிக்கப்படுகிறது.

Tamilnadu Government

நாட்டிற்கே தமிழகம் பள்ளிக் கல்வியில் முன்னோடியாக திகழ்கிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி நாடே திரும்பி பார்க்கும் வகையில் தமிழக அரசு மாஸ் காட்டி வருகிறது. ஆரம்ப கல்வியே அடிப்படை கல்வி என்ற நோக்கில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என மாநில பாடத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுத்து வருகிறது. 

இதையும் படிங்க: Tamilnadu Government School: பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு! செப்டம்பர் 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

College Student

மேலும் ஏழை, எளிய மாணவர்கள் காலை நேரத்தில் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை தவிர்க்கும் காலை உணவு திட்டம் தமிழக அரசு சார்பாக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தால் 1 முதல் 5-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பெரும் அளவில் பயனடைந்த நிலையில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதேபோல் அதேபோல் அரசு பள்ளிகளில் பயின்று, கல்லூரிகளில் சேரும் மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுவது போல், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. 


School Students

இந்நிலையில், பள்ளி மாணவர்களின் தமிழ் மொழித் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (CBSE/ICSE உட்பட) 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.  இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 

School Education Department

அதன்படி நடப்பாண்டுக்கான திறனாய்வுத் தேர்வு அக்டோபர் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த படிவங்களை செப்டம்பர் 5 முதல் 19-ம் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கான வினாத்தாள் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும். இதுசார்ந்த கூடுதல் விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்களிடம் கேட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றை கடைசி நாள் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:  Tamilnadu Government: 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம்! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா? தமிழக அரசு அறிவிப்பு!

Tamil Mozhi ilakkiya Thiranari Thervu

தேர்வெழுதிய மாணவர்கள், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். https://apply1.tndge.org/ttse-result-2022  என்ற இணையப்பக்கத்திற்கு செல்லவும். அதில் உங்கள் பதிவெண், பிறந்த தேதி விவரங்களை சமர்ப்பிக்கவும். தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Latest Videos

click me!