தமிழக அரசின் மகளிர் நல திட்டங்கள்
தமிழகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியில் சென்று சேரும்போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. மேலும் விடியல் திட்டமானது திமுக அரசால் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பெண்கள் இலவசமாகவே பேருந்தில் பயணிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் மாதம் குறைந்தது ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க வாய்ப்பாக மாறியது. இதனால் தங்களது வருமானத்தில் துண்டு விழாத நிலை ஏற்பட்டது. அடுத்தாக கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், கைம்பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பும் அறிவிக்கப்பட்டு செயப்படுத்தப்படவுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
தமிழகம் முழுவதும் 200 பயனாளிகளுக்கு நடமாடும் உணவு கடை, ஜூஸ் கடை உள்ளிட்ட சுய தொழில் செய்வதற்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் சுய தொழில் செய்து சுயமரியாதையுடன் வாழ்வதற்கு 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில், திமுக அரசின் அசத்தல் திட்டம் தான் மகளிர் உரிமைத்தொகை திட்டமாகும். இந்த திட்டத்தை திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. இதன்படி இந்த திட்டத்தை செயல்படுத்தியும் உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக சட்டப்பேரவையில் குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ என பெயரிட்டார். இந்த திட்டத்தின் பணிகள் அடுத்தடுத்து தொடங்கியது. விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது.
மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்
இதில் 1 கோடியே 15 லட்சத்து 27,172 மகளிர் பயன்பெற்று வருகின்றனர். இதில் லட்சக்கணக்கான மக்களின் விண்ணப்பங்கள் உரிய தகுதிகள் இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் புதிதாக 1.48 லட்சம் பேரது விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. அவர்களுக்கும் மாதம், மாதம் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
வேலை இல்லாதவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசின் அடுத்த அசத்தல் திட்டம்
நிபந்தனைகள் நீக்க திட்டம்
தமிழக அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருக்கும் தகுதிகள் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு செயல்படுத்தியுள்ள இந்த மகளிர் உரிமைதொகை திட்டத்தை மற்ற மாநிலங்களும் காபி அடித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கர்நாடாகவில் நடைபெற்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி மகளிர்களுக்கு உதவிடும் வகையில் மாதம் 2ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதே போல ஆட்சிக்கு வந்ததுத் முதல் திட்டமாக மாதம் 2ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல தெலங்கானா மாநிலத்திலும் மகளிர்களுக்கு மாதம், மாதம் உதவிடும் வகையில் 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது
magalir urimai thogai
தேர்தல் வாக்குறுதி- காங்கிரஸ் அறிவிப்பு
தற்போது சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று வரும் காஷ்மீர் மற்றும் ஹரியானாவிலும் மகளிர்களுக்கு மாதம் மாதம் பணம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் படி காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் 3ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது காஷ்மீர் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் அடுத்ததாக ஹரியானா மாநிலத்தின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது அதன் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தும் 2000ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஹரியானாவில் மகளிர் உரிமை தொகை
இதே போல சமையல் எரிவாயு விலை, முதியோர் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ஆயிரம் ரூபாய் மட்டுமே மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவது போல் அதிகரித்து வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. எனவே தமிழக அரசை பொறுத்தவரை தற்போது ஆயிரம் ரூபாய் வழங்க விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமை தொகை 2ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.