பழனி கோயில் பக்தர்கள் கூட்டம்
திருப்பதி கோயிலுக்கு இணையாக தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில் பழனி முருகன் கோயிலாகும். தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற திருத்தலமாக பழனி முருகன் கோயில் உள்ளது. பழனி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாகும். அந்த அளவிற்கு புகழ் பெற்ற முருகன் கோயிலில் நாள் தோறும் பல மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
அந்தவகையில் பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் உலக புகழ் பெற்றது. இங்கு வரும் பக்தர்கள் மொட்டை அடித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். மேலும் பழனி பகுதியை சுற்றியுள்ள மக்கள் எந்த விஷேசமாக இருந்தாலும் பழனி கோயிலில் தான் நடத்துவார்கள். இந்தநிலையில் பழனி கோயிலில் தற்போது நவராத்திரி திருவிழா தொடங்கியுள்ளது.