கேட்டதை விட கூடுதலாகவே செஞ்சோம்.! விமான சாகச நிகழ்வில் நடந்தது என்ன.? தமிழக அரசு விளக்கம்

First Published | Oct 7, 2024, 8:58 AM IST

சென்னையில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்வில் வெயிலின் தாக்கத்தால் 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழக அரசின் முன்கூட்டிய திட்டமிடல் இல்லாததால் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய விமானப்படையில் ஆண்டு விழாவையொட்டி சென்னையில் நேற்று பிரம்மாண்ட சாகச நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்விற்கான ஒத்திகை கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதனையடுத்து இந்த சாகச நிகழ்வின் ஒத்திகை காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவியது. இதனால் தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளை அழைத்து சென்று நேரில் பார்க்க பொதுமக்கள் ஆர்வமாக சென்றனர். அதற்கு ஏற்றார் போல் விமான சாகசமும் அனைவரையும் கவர்ந்தது. ஆனால் காலையில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டது. இதனால் மக்கள் வெயிலில் வாட்டி வதைத்தது. இதனால் திறந்தவெளியில் நின்ற பொதுமக்களால் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் 200க்கும் மேற்பட்டவர்கள் சுருண்டு விழுந்தனர். ஏராளமானோரை மீட்ட போலீசார் மருத்துவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Chennai Air Show

இருந்த போதும் 5 பேர் உயிரிழந்தனர்.  விமான சாகச நிகழ்வை பார்க்க 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்த நிலையில் ஒரே நேரத்தில் நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே செல்ல முற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் கூட கிடைக்காமல் தவித்தனர். மேலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வெயிலில் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மெட்ரோ ரயில் நிலையம், பறக்கும் ரயில் நிலையத்தில் கூட்டம் அலை மோதியது. பேருந்துகளிலும் கூட்டம் நெரிசல் அதிகமாக இருந்தது. அதிகமான கூட்டத்தில் சுமார் 4 மணி நேரம் வாகனங்கள் மெரினா சாலையை சுற்றியுள்ள பகுதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு மு்ன கூட்டியே திட்டமிடாதது தான் இந்த சம்பவத்திற்கு காரணம் எனவும், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் ஈடுபடவில்லையெனவும்,

Tap to resize

air show

air போக்குவரத்தை சீர் செய்யவும் ஏற்பாடு செய்யவில்லையென குற்றம்சாட்டப்பட்டது. எனவே தமிழக அரசின் தோல்வியே இந்த உயிரிழப்பை காட்டுவதாக அரசியல் கட்சிகள் கூறியிருந்தனர்.   இந்தநிலையில் இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச் நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும் பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.

இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
 

air show

சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு
அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Latest Videos

click me!