புதிய ரேஷன் கார்டு வேண்டுமா.? விண்ணப்பித்த 15 நாட்களில் குட் நியூஸ்- வெளியான அறிவிப்பு

First Published | Oct 7, 2024, 7:00 AM IST

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் கிடைக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. புதிய ரேஷன் கார்டுகளுக்காக https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

ration shop

மானிய விலையில் உணவு பொருட்கள்

தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 924 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.  இதில் மொத்தமாக 7 கோடியே 2 லட்சத்து 36 ஆயிரத்து 605 பேர் பயனாளிகளாக உள்ளனர். இவர்களுக்கு  34 ஆயிரத்து 793 நியாயவிலைக் கடைகளின் மூலம் மானிய விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இலவசமாக அரிசி, கோதுமை, சக்கரை, பாமாயில், மண்ணெண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.

இதனை பெற்று கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசால் பரிசு தொகுப்பும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அதனை பெறுவதற்கு முக்கிய தேவையாக ரேஷன் கார்டு உள்ளது.

முக்கிய ஆதாரமாக ரேஷன் கார்டு

மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண நிதி வழங்குவதில் முக்கிய ஆதாரமாக ரேஷன் கார்டு உள்ளது. தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகை திட்டத்திலும் ரேஷன் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. ரேஷன் கார்டு இருந்தால் மட்டும் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்க முடியும்.

அந்த வகையில் கடந்தாண்டு மகளிர் உரிமை தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் பல லட்சம் மக்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதற்கு முதல் காரணமாக ரேஷன் கார்டு இல்லாததாக கூறப்பட்டது. இதனையடுத்து 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர்.

Tap to resize

ஓராண்டுகளாக வழங்கப்படாத ரேஷன் கார்டு

ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. நாள் தோறும் உணவுப்பொருள் வழங்கல் துறைக்கு அழைய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே எப்போது புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. நாடாளுமன்ற தேர்தல் பணியின் காரணமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது தாமதம் ஏற்பட்டதாகவும், ஆகஸ்ட் மாதம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது.  சரியான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் நிராகரிக்கப்பட்டவர்கள்  மறுபரிசீலனை செய்வதற்கு விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

15 நாட்களில் ரேஷன் கார்டு

இதனிடையே புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் எப்போது கிடைக்கும் என்ற நிலை இருந்தது தற்போது புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் தகுந்த ஆவணங்கள் இருந்தால் 15 நாட்களுக்குள்  ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும்  தமிழகத்திற்கு மாதம் 8,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கி வந்த மத்திய அரசு, தற்போது 17,100 மெட்ரிக் டன் அளவிற்கு உயர்த்தி வழங்கி உள்ளதாக  என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

இந்தநிலையில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்கள் https://www.tnpds.gov.in/ என்ற உணவு பொருட்கள் வழங்கல் துறையின் இணையதள பக்கத்திற்கு சென்று புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பிக்கலாம். புதிய மின்னு அட்டை விண்ணப்பிக் என்ற காலத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் குடும்ப தலைவர், உறவினர்கள், இருப்பிட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி.?

இறுதியில் பண்டகம் இல்லா அட்டையா.? அரிசிய அட்டையா.? சர்க்கரை அட்டையா அல்லது மற்ற அட்டையா என்பதனை என்பதை குறிப்பிட வேண்டும். எரிவாயு சிலிண்டர் இருந்தால் அந்த தகவலையும் பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து ஒப்புதல் கொடுத்த பிறகு விண்ணப்பம் உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்று விடும். அதனை பரிசீலனை செய்து தகுந்த ஆவணங்கள் இருந்தால் 15 நாட்களில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படவுள்ளது. 

Latest Videos

click me!