மேலும் இன்று நடைபெற்ற இந்த விமான சாகச நிகழ்ச்சிகளை சென்னையில் சுமார் 10 லட்சம் பேர் கண்டு களித்ததாக சில தரவுகள் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் மக்கள் இந்த விமான சாகசங்களை பார்க்க கூடியதாகவும். மெரினா சாலை மற்றும் பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 லட்சம் பேர் ஒன்று கூடி இந்த விமான சாகச நிகழ்ச்சியை கண்டு களித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் எதிர்பார்த்ததை விட பல லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குழுமிய நிலையில் மிகப்பெரிய அளவிலான கூட்ட நெரிசல்கள் இந்த சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்டுள்ளது. இதனால் சில அசம்பாவிதங்களும் இப்போது சென்னையில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.