தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி துறை அதிரடி அறிவிப்பு

First Published Oct 6, 2024, 6:46 PM IST

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் தலைமைப் பண்பை மேம்படுத்தும் வகையில் மாணவர் தலைவர், மாணவர் அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tamil Nadu School Education

 தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் பயிலக்கூடிய மாணவர்கள் மத்தியில் தலைமைப் பண்பை மேம்படுத்தும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் மாணவர் குழுக்கர் அமைத்து மாணவர் தலைவர் மற்றும் மாணவர் அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமை திறன் மேம்படும் வகையில் மாதிரி சட்டப்பேரவை, நாடாளுமன்றம் நடத்தப்படும்.

Government School Students

இதனை செயல்படுத்துவதற்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். இந்த திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டி்ல செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவை அறிவிப்பு வெளியிட்டது. அத செயல்படுத்தும் விதமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் குழு அமைப்பினை “மகிழ் முற்றம்” என்ற பெயரில் நடைமுறைப்படுத்த முவு செய்யப்பட்டள்ளது. குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை வேற்றுமைகள் அற்ற பரஸ்பர ஆதரவு ஆகியவை இந்த அமைப்பின் நோக்கமாகும். 

Latest Videos


School Students

மகிழ் முற்றம் மாணவர் குழு கட்டமைப்பின் கீழ் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 குழுக்களாக பிரிக்கப்படுவர். இக்குழு அமைப்பில் 1ம் முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இடம் பெறுவார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் பயிலும் மாணவர்கள் இந்த குழுக்களில் சேர்க்கப்பட்டு அதன் விவரம் எமிஸ் தளத்தின் மூலம் கண்காணிக்கப்படும்.

Tamil Nadu School Education Department

மேலும் பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியர் மகிழ் முற்றம் என்ற மாணவர் குழு அமைப்புக்கான பொறுப்பு ஆசிரியராக நியமிக்கப்பட வேண்டும். மற்ற ஆகிரியர்களுக்கு குலுக்கல் முறையில் குழுவானது ஒதுக்கப்படும். ஒவ்வொரு குழுவுக்கும் உயர் வகுப்பில் பயிலும் மாணவர்களில் இருவர் தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும். அதே போன்று வகுப்பு வாரியாகவும் அந்த குழுவின் மாணவர் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கான மாணவர் தலைவர்கள், வகுப்பு தலைவர்கள், தலைமை பொறுப்பு ஆசிரியர், குழுவுக்கான பொறுப்பு ஆசிரியர்கள் ஆகியோரின் பதவி ஏற்பு விழா அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதி நடைபெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதிபடுத்த வேண்டும்.

Tamil Nadu School Education

நிகழ்ச்சி தொடர்பான படங்கள், காணொலியை எமிஸ் தளத்தில் நவம்பர் 19ம் தேதிக்குள் பதவிவேற்றம் செய்ய வேண்டும். இந்த குழுக்களின் செயல்பாடுகள் மாதந்தோறும் மதீப்பீடு செய்யப்பட்டு புள்ளிகள் கணக்கிடப்படும். அதிக புள்ளிகளை பெறும் குழுவானது அந்த மாதத்தின் வெற்றி குழுவாக அறிவிக்கப்பட்டு அதன் வண்ணக்கொடி பள்ளியில் அனைவரின் பார்வைக்கும் எதிர்வரும் மாதம் முழுவதும் காட்சிபடுத்த வேண்டும். இது குறித்த தகவல்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!