இதையடுத்து, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது துன்புறுத்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சேவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கவின்குமார், ஈஸ்வரமூர்த்தியை கைது செய்தனர். மாமியார் சித்ராதேவி உடல்நிலை காரணமாக பைண்டிங் ஆர்டர் முறையில் வீட்டு காவலில் இருந்து வந்தார். வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதால் சித்ராதேவியை கைது செய்யவில்லை என்று ரிதன்யாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், மாமியார் சித்ராதேவி நேற்று கைது செய்யப்பட்டார்.