2025-26ம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 22 லட்சம் பேர் தேர்வு எழுதவுள்ளனர், தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வு மையத்தில் செல்போன், கடிகாரம் போன்றவை அனுமதிக்கப்படாது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு முக்கிய தேர்வாக உள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று தொடங்கவுள்ளது. அந்த வகையில், நீட் தேர்வில் கலந்து கொள்வதற்கான கடந்த பிப்ரவரி 7ல் தொடங்கி மார்ச் 7ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு முடிந்தது. நீட் தேர்வை இந்தாண்டு நாடு முழுவதும் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
24
13 மொழிகளில் நீட் தேர்வு
இந்த வகையில் 2025-26ம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரைநடைபெறுகிறது. நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. சென்னையில் 44 மையங்களில் 21,960 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு நடக்கிறது.
34
மாணவர்களுக்கு கட்டுப்பாடு
தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி தேர்வு மையத்திற்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி தரப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதற்கு மேல் வருவோருக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.
வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், கடிகாரம், முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது. தலை முடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைமாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு தொடர்பாக கூடுதல் விவரங்களை //neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.