திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கருவேப்பஞ்சேரியில் அரசு பேருந்தும் - ஆம்னி காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
23
அப்பளம் போல் நொறுங்கிய கார்
ஆம்னி கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்
இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
33
சுற்றுலா வந்த இடத்தில் விபத்து
விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.