Published : May 03, 2025, 04:42 PM ISTUpdated : May 03, 2025, 05:04 PM IST
மதுரை ஆதீனம் சென்னை செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டையில் கார் விபத்தில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பிய அவர், தருமபுர ஆதீனம் விபத்தை திட்டமிட்ட சதி என்று குற்றம் சாட்டியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதினம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கார் உளுந்தூர்பேட்டை வந்துக்கொண்டிருந்த போது மற்றொரு கார் மோதியது. இந்த விபத்தில் மதுரை ஆதீனம் எந்தவித காயமுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் விபத்துக்குள்ளான காரிலேயே மதுரை ஆதினம் சென்னை புறப்பட்டார். இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் இந்த விபத்து திட்டமிட்ட சதி என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
24
madurai adheenam
மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதி
இந்த நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள், நேற்று தன்னை கொலை செய்ய கார் விபத்து மூலம் சதி நடந்ததாக குற்றம்சாட்டினார். இன்று நடந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில், நேற்று விபத்தில் சிக்கி உயிர் தப்பியதை சுட்டிக்காட்டி மதுரை ஆதினம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
34
Madurai Adheenam News
என்னை கொலை செய்ய சதி
நேற்று கூட ஒரு சம்பவம் நடந்து விட்டது. என்னை கொலை செய்ய சதி செய்துவிட்டார்கள். மீனாட்சி சுந்தரேச பெருமாள் தான் என்னைக் காப்பாற்றினார். இன்று இந்த இடத்திலே நிப்பேனா என்ற அளவுக்கு நேற்று ஆகி விட்டது. புத்தர் ஆட்சி காலம் பொற்காலம் என்பார்கள், நான் பார்த்ததில்லை. ஆனால் எங்கள் தர்மபுர ஆதினத்தின் காலம் பொற்காலம் தான்.
பாஜகவில் தேசபக்தி மிக்கவர்கள் உள்ளதாகவும், எத்தனையோ பேர் ஆண்டாலும், சிறந்த ஆளுமையாக இருப்பவர் பிரதமர் மோடி தான் எனக்கூறினார். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி மிகவும் துணிச்சலானவர் என குறிப்பிட்டார். கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் செல்கின்றனர். இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை செய்கின்றனர். இந்துக்கள் சுண்டல் தருகிறார்களா என கேட்பதாகவும் தெரிவித்தார்.