முன்னதாக இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க வேண்டாம், யார் விமர்சனம் செய்தாலும் தவறான வகையில் விமர்சனம் செய்ய வேண்டாம், மாநாட்டை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனவும் கூறினார். தனிநபர் விமர்சனத்தை தவிர்த்து விட்டு ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டும், பூத் கமிட்டியில் அதிக பெண்களை இடம்பெறச் செய்ய வேண்டும், கொடி ஏற்றுவது, பொதுக் கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவற்றிற்கு அனுமதி கிடைக்காவிட்டால் கட்சி தலைமைக்கு தெரிவுபடுத்த வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.