மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.! யாருக்கெல்லாம் தெரியுமா.?

First Published | Nov 3, 2024, 11:17 AM IST

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்துத் தரப்பினருக்கும் இந்தத் திட்டங்கள் பயனளிக்கின்றன. மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

tamilnadu government

தமிழக அரசின் நிதி உதவி திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏழை. எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நிதி உதவி திட்டமானது நடைமுறைப்பட்டுத்தப்படுகிறது. அந்த வகையில் பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பல திட்டங்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் எதிர் காலத்திற்காக வங்கி கணக்கில் 25ஆயிரம் ரூபாய் முதல் 50ஆயிரம் ரூபாய் வரை டெபாசிட் செய்யப்படுகிறது. இதனையடுத்து பள்ளி செல்லும் மாணவர்களுக்காக இலவச கல்வி, சீருடை, நோட்டு புத்தகம், இலவச பஸ்பாஸ், இலவச மிதி வண்டியும் வழங்கப்படுகிறது. 
 

CM Stalin

பெண்களுக்கான திட்டங்கள்

இதனையடுத்து கல்வி ஊக்கத்தொகையும் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் காலை உணவானது சத்தாக சாப்பிடும் வகையில் காலை உணவு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதே போல திருமண உதவி திட்டமும் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது.

திருமணத்திற்கு 50ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. அடுத்ததாக கர்ப்பிணி பெண்களுக்கு  உதவிடும் வகையில் 18ஆயிரம் ரூபாயை தமிழக அரசு பல தவனைகளாக பிரிந்து வழங்குகிறது. மேலும் பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்காக மானியத்தில் கடன் உதவியும் வழங்கி வருகிறது.
 

Latest Videos


magalir urimai thogai

மகளிர் உரிமை தொகை திட்டம்

இதே போல நிதி உதவி திட்டத்தின் கீழ் ஒரு மாதத்தில் 3 ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் வரவு வைக்கிறது. அதன்படி திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ்  1.15 கோடி பேர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்தில் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Pudhumai Penn Scheme

புதுமைப்பெண் திட்டம்

அந்த வகையில் புதிய ரேஷன் கார்டுகள் பெற்றவர்கள், மகளிர் உரிமை தொகையில் மேல்முறையீடு செய்தவர்கள் என கூடுதலாக 1 லட்சத்து 48 ஆயிரம்பேருக்கு உரிமைத் தொகை தரப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.. 

அடுத்தாக அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உயர்கல்வியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணிக்கில் செலுத்தப்படுகிறது.

தமிழப்புதல்வன் திட்டம்

இந்த திட்டத்தால் மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் போன்ற கல்வி சார்ந்த பொருட்கள் வாங்க உதவியாக இருந்து வருகிறது. இதேபோல அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் மாணவர்களுக்கு அத்தியாவசிய தேவைக்கு பயனுள்ளதாக உள்ளது. எனவே தமிழக அரசின் இந்த இரண்டு திட்டங்களின் மூலம் மட்டுமே ஒரே குடும்பத்தில் மாதம் 3ஆயிரம் ரூபாய் வரை வங்கி கணக்கில் பணம் வரும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஏழை மக்கள் தங்களது தேவைகளுக்கு தங்களது குழந்தைகளின் படிப்பு செலவிற்கும் பெரும் பயனளித்து வருகிறது. 

click me!