வெளிநாடு செல்வதில் சிரமம்
கால அவகாச நீட்டிப்பு அவ்வாறான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் முடிவற்ற நிலையில் பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்திட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை பெற மற்றும் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற சிரமம் ஏற்பட்டது.
எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கலைந்திட பிறப்பு பதிவு செய்து, 15 ஆண்டு கால அளவு முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் உள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்திட 5 ஆண்டு கால அவகாசம் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது.