தமிழக அரசியல் களத்தில் சீமான்
தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக அரசியலில் களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், திரைத்துறையில் கலக்கி வரும் விஜய் ஒரு படத்திற்கு 100 கோடிக்கும் மேல் சம்பளமாக பெற்று வருகிறார். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டி உறுதி என அறிவித்தார். இதனையடுத்து தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டவர் தனது முதல் அரசியல் மாநாட்டிற்கான தேதியையும் வெளியிட்டார். இதற்கிடையே சீமானும் விஜய்யும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கப்போகிறார்.
சீமான்- விஜய் கூட்டணி.?
விஜய்க்கு சீமான் தான் அரசியல் தொடர்பாக அறிவுரை கூறி வருகிறார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியானது. இதற்கு ஏற்றார் போல் சீமானும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தது மட்டுமில்லை தம்பி, தம்பி என அழைத்து வந்தார். எனவே தமிழக சட்டமன்ற தேர்தலில் சீமான்- விஜய் கூட்டணி அமைவது உறுதி என பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் தான் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில் பேசிய விஜய் தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் தொடர்பாக தனது கொள்கையை அறிவித்தார். மேலும் சீமான் தொடர்பாகவும் மறைமுகமாக விமர்சித்தார். இதனால் அதிருப்தி அடைந்த சீமான், தங்களுக்கும் விஜய்க்கும் செட் ஆகாது. அவர் வழி வேற, எனது வழி வேறு என அறிவித்திருந்தார்.
மோதலில் விஜய்- சீமான்
மேலும் நேற்று முன்தினம் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் விஜய்யை மோசமாக விமர்சனம் செய்தார். திராவிடமும், தமிழ் தேசியமும் எப்படி ஒன்றாக முடியும்? சாலையில் ஒன்று அந்த பக்கம் நிற்க வேண்டும். அல்லது இந்த பக்கம் நிற்க வேண்டும் நடுவில் நின்றால் லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய் தம்பி. அவர்கள் கூறியது கொள்கை அல்ல, கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை என கூறினார்.
சீமான் விமர்சிக்க காரணம் என்ன.?
இதனால் தமிழக வெற்றிக்கழகம் - நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் சமூகவலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென சீமான் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை விமர்சிப்பது தொடர்பான தகவலை சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார். அதில் தான் ஆசையாய் வளர்த்த பிள்ளை காணாமல் போகிறது அதனால் குடும்பத்திற்குள் குழப்பம் வருகிறது 20 ஆண்டுகள் கழித்து காணாமல் போன மகன் கிடைக்கிறான் மகிழ்ச்சியில் குடும்பமே கொண்டாடுகிறது
vijay
விஜய்யை பொளக்க இது தான் காரணம்
ஆனால் வந்தவன் ஆளே மாறி வந்திருக்கிறான் என்பது போகப் போகப் தெரிகிறது அவனை இயக்குகிறவன் தவறான கதைகளை சொல்லி தன் குடும்பத்திற்கு எதிராகவே அவனை வளர்த்துள்ளான் என்பது அப்பாவிற்கு தெரியவர அப்பா அவனை போட்டுத் தள்ளுகிறார் !நடிகர் விஜய்யின் GoAt படத்தில் தன் மகனை தவறானவன் என தெரிந்தவுடன் விஜய் எப்படி பொளந்தாரோ அப்படித்தான் நிஜத்தில் தம்பியாக நினைத்தவர் தவறான அரசியலை கையிலெடுத்தவுடன் அண்ணன் சீமானும் பொளக்கிறார் ! That’s all bro ! என சாட்டை துரைமுருகன் பதிவிட்டுள்ளார்.