தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிவாண்டி வி.சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். சுமார் 3 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய்: திமுகவையும், பாஜகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்களே தவெகவின் ஒரே முழு முதல் கொள்கை எதிரி. அடுத்த திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு பெரியாரையும், அண்ணாவின் பெயரையும் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கும் ஒரு குடும்ப சுயநலக் கூட்டம்தான் நமது அடுத்த அரசியல் எதிரி என்று திமுகவை டைரக்டாக அட்டாக் செய்து அதிரவிட்டார்.
இதையும் படிங்க: Broadway Bus Stand Change: இடம் மாறும் பிராட்வே பேருந்து நிலையம்! எந்த இடம் தெரியுமா? வெளியான தகவல்!
குறிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என மாஸ் அறிவிப்பை வெளியிட்டு ஆளுங்கட்சியை அலறவிட்டார். மேலும் எம்ஜிஆர் கொள்கைகளை அவர் போற்றி புகழ்ந்தார். ஆனால், அதிமுக குறித்து விஜய் விமர்சிக்காதது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டிற்கு பின்னர், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
தீபாவளிக்கு முன்பு கட்சி நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியை சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது விஜய் மாநாட்டு பேச்சு குறித்து இபிஎஸ்யிடம் நிர்வாகிகள் விவாதித்துள்ளனர். அப்போது, விஜய் நம்மைபற்றி அவர் எதுவும் விமர்சிக்கவில்லை. ஆகையால் அதிமுகவினரும் விஜய்யை விமர்சிக்கவேண்டாம் என்று இபிஎஸ் நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், வரும் 6-ம் தேதி நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மாநாட்டில் விஜய் பேசியது குறித்து ஆலோசிக்க அதிக வாய்ப்புள்ளது.