இறுமாப்புடன் பேசி தீர்மானம் போடுபவர்களை தீர்மானமாக மக்களும் ஏமாற்றுவார்கள்! திமுகவை சீண்டும் தமிழிசை!

Published : Dec 22, 2024, 06:58 PM IST

Tamilisai Soundararajan vs MK Stalin: திமுக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

PREV
15
இறுமாப்புடன் பேசி தீர்மானம் போடுபவர்களை தீர்மானமாக மக்களும் ஏமாற்றுவார்கள்! திமுகவை சீண்டும்  தமிழிசை!
DMK working committee meeting

திமுக செயற்குழுக் கூட்டம்  அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  2026-ல் வெற்றி நமதுதான். 200 தொகுதிகள்ல நம்மோட கூட்டணி வெல்லும் என கூறியிருந்தனர். இதற்கு  இறுமாப்புடன் பேசி மக்களை ஏமாற்றி தீர்மானம் போடுபவர்களை தீர்மானமாக மக்களும் ஏமாற்றுவார்கள் என தமிழிசை கூறியுள்ளார். 

25
tamilisai soundararajan

இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திமுக இன்று நடந்த செயற்குழுவில் பல தீர்மானங்களை நிறைவே(ஏமா)ற்றி இருக்கிறது... கேரளாவிற்கு வைக்கம் நிகழ்ச்சிக்கு போனதை தாங்களே பாராட்டி கொள்கிறார்கள் அதே கேரளாவில் இருந்து தமிழக மக்களை பாதிக்கும் மருத்துவ கழிவுகளை கொட்டியதை கண்டுகொள்ளாமல் இருந்ததை மக்கள் தீர்மானமாக எதிர்த்திருக்கிறார்கள். மழைக்கு தயாராகும் அடிப்படைக் கட்டமைப்புகளை சரி செய்யாமல் மத்திய அரசை மட்டுமே குறை சொல்லி கொண்டிருப்பதை மக்கள் தீர்மானமாக அறிந்திருக்கிறார்கள். அங்கங்கே நடக்கும் மக்கள் போராட்டங்களே இதற்கு சாட்சி.

35
tamilisai

டங்க்ஸ்டன் தொழிற்சாலை பற்றி பத்து மாதம் சும்மா இருந்துவிட்டு மக்களின் போராட்டம் பத்தி எரியும் போது தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்றுவதை மக்கள் தீர்மானமாகவே உணர்ந்திருக்கிறார்கள் புதிய கல்விக் கொள்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வந்தாலும் அரசியல் காரணங்களுக்காக அதை ஏற்காமல் ஒரு திட்டத்தை ஏற்காமல் ஆனால் அந்த திட்டத்திற்கு வேண்டிய நிதி மட்டும் தரவில்லை என்று மத்திய அரசை குறை கூறுவதை இளைய சமுதாயம் தீர்மானமாக ஏற்றுக் கொள்ளாது.

45
DMK

கைவினை கலைஞர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் தமிழகத்தைச் சார்ந்த கைவினைக் கலைஞர்கள் 8 லட்சத்திற்கும் மேலானவர்கள் பதிவு செய்திருந்தும் மத்திய அரசு அவர்களுக்கு உதவ தயாராக இருந்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கியதை மக்கள் தீர்மானமாக உணர்ந்து இருக்கிறார்கள் ... இரண்டு ஆண்டுகளாகியும் வேங்கை வயலைச் சார்ந்த பட்டியலின சகோதர சகோதரிகளுக்கு நியாயம் கிடைக்காமல் தங்களை சமூக நீதி காவலர்கள் என பட்டியலிட்டுக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றும் வேலை என்று மக்கள் தீர்மானமாகவே உணர்ந்து இருக்கிறார்கள்.

55
MK Stalin

போதையின் பாதையில் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு போதை கடைகளில் பாதையை திறந்து விட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உள்ள அரசின் தோல்வியை மக்கள் தீர்மானமாகவே உணர்ந்து இருக்கிறார்கள். மழை மழை வெள்ள காலங்களிலும் சரி மற்ற நேரங்களிலும் சரி மக்களைக் காக்காத திமுக அரசு 200 இருநூறு.. என்று இறுமாப்புடன் பேசி #மக்களை ஏமாற்றி தீர்மானம் போடுபவர்களை தீர்மானமாக மக்களும் ஏமாற்றுவார்கள். விடியலை தருகிறோம் என்ற  அவர்களுக்கு ஆட்சியில் இருந்து விடுதலை தருவார்கள். விடியலை தராமல் விளம்பரம் மட்டுமே நடக்கிறது என்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள் என தமிழிசை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories