Northeast Monsoon
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததை அடுத்து ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால், பொதுமக்கள் மழை என்ற செய்தியை கேட்டாலே பீதி அடைகின்றனர். இந்நிலையில் இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்
வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamilnadu Heavy Rain
அதன்படி மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை 05.30 மணியளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து இன்று காலை 08.30 மணிளளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24ம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் சினிமாவை மிஞ்சிய கோர விபத்து! 20 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் பலி! நடந்தது என்ன?
Tamilnadu Rain
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதேபோல் 24ம் தேதி வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Chennai Rain
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
சென்னை மற்றும் புறநகரை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.