ஒரே ஊரில் பல ஆண்டுகளாக பணியா.? உடனடியாக டிரான்ஸ்பர்- செக் வைத்த தமிழக அரசு

Published : Dec 22, 2024, 02:49 PM ISTUpdated : Dec 22, 2024, 02:52 PM IST

ஊராட்சி செயலாளர்களுக்கு நிர்வாக காரணங்களுக்காக வட்டார, ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

PREV
14
ஒரே ஊரில் பல ஆண்டுகளாக பணியா.? உடனடியாக டிரான்ஸ்பர்- செக் வைத்த  தமிழக அரசு
Government staff protest

அரசு பணியாளர்கள் இடமாறுதல்

காவல்துறையினர், அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் பணி செய்யாமல் அவ்வப்போது இடமாறுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் பொன்னையா அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை நிர்வாக காரணங்களுக்காக வட்டார அளவில் மாறுதல் செய்யும் அதிகாரத்தினை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கும்,

24
Panchayat Secretaries

ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்

ஊராட்சி ஒன்றியங்களுக்கிடையேயான பணியிட மாறுதல் செய்யும் அதிகாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளருக்கும், மாவட்ட மாறுதல் செய்யும் அதிகாரத்தினை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் அவர்களுக்கும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கோரிக்கை மனுவினை பரிசீலனை செய்ததில், பின்வரும் காரணங்களுக்காக கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு, வட்டார அளவில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி

34
Transfer of Panchayat Secretaries

இடமாற்றத்திற்கான காரணங்கள்

1.கிராம ஊராட்சியில் உள்ள பணிகளுக்கு ஏற்ப தகுதியான ஊராட்சி செயலாளர்களை பணியமர்த்துதல் 

2. ஊராட்சி செயலாளர்கள் ஒரே கிராம ஊராட்சியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதை மாற்றியமைத்தல்

3. வயது மற்றும் உடல்நலம் சார்ந்த அடிப்படையில் கிராம ஊராட்சிகளை ஒதுக்கீடு செய்தல்

4. ஊராட்சி செயலாளர் முதுநிலை மற்றும் நிர்வாக அனுபவத்திற்கு ஏற்ப கிராம ஊராட்சிகளில் பணியமர்த்துதல்

44
Panchayat Secretaries Transfer

கலந்தாய்வு நடத்த அறிவுறுத்தல்

5. கள அளவில் மாறுபட்டுள்ள வெவ்வேறு ஊராட்சிகளில் பணியாற்றும் வாய்ப்பு பெறுவதால் ஊராட்சி செயலாளர்களின் திறன் மேம்பாடு அடைதல்

6. நிர்வாக நலன் மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் ஊராட்சி செயலாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குதல் எனவே, கிராம ஊராட்சிகளில் உள்ள பணிகளை ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சி செயலாளர்களுக்கு தேவை மற்றும் நிர்வாக நலன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி வட்டாரத்திற்குள் பணியிடமாறுதல்களை வழங்கிட சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

Read more Photos on
click me!

Recommended Stories