Medical waste
நமது அண்டை மாநிலமான கேரளா சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் கழிவுகள் மற்றும் நோய் பரப்பும் மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டு எல்லையில் தொடர்ந்து கொட்டி வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தின் மருத்துவ கழிவுகளை திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் மற்றும் கோடகநல்லூர் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கேரள அதிகாரிகள் கொட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Kerala Dumping Garbage in TamilNadu
இந்த மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்ட நிலையில், இதை கேரள அதிகாரிகள் அகற்றும்படி தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. ''கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார்.
மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேரளாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விவாகரத்தில் உஷாரான தமிழ்நாடு அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
உ.பி.யில் இயக்குவதற்காக தமிழ்நாட்டில் 10 ரயில்களில் பெட்டிகளை குறைத்த ரயில்வே; பயணிகள் ஷாக்!
kerala waste
இதன்பின்பு கழிவுகளை கொட்டுவதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த விவகாரத்தை கையில் எடுத்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், ''நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை கேரளா அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும்'' என உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் துணை ஆட்சியர் தலைமையில் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட கேரள மாநில அதிகாரிகள் இன்று நெல்லைக்கு வந்தனர். நெல்லை மாவட்ட துணை ஆட்சியர் உள்பட தமிழக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய அவர்கள் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின்னர் மருத்துவ கழிவுகள் அங்கு இருந்து அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.
Tamilnadu and Kerala
மருத்துவ கழிவுகளை கொண்டு செல்வதற்காக கேரளாவில் இருந்து 11 லாரிகள் வந்துள்ளன. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மருத்துவ கழிவுகள் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்த கழிவுகள் மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லப்பட உள்ளன. நெல்லை மட்டுமின்றி தமிழ்நாட்டின் மற்ற எல்லைகளில் கேரளா கொட்டிய இறைச்சிக் கழிவுகள் உள்பட அனைத்து கழிவுகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
200 தொகுதிகளில் வெற்றி.! தொண்டர்களுக்கு இலக்கு நிர்ணயித்த திமுக