சென்னையில் சினிமாவை மிஞ்சிய கோர விபத்து! 20 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் பலி! நடந்தது என்ன?

First Published | Dec 22, 2024, 12:54 PM IST

Chennai Accident: சென்னை பள்ளிகரணையில் குடிபோதையில் அதிவேக பைக் சாலை தடுப்பில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் விஷ்ணு (24) மற்றும் கோகுல் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Chennai Pallikaranai Bike Accident

சென்னை பள்ளிகரணையில் இன்று அதிகாலை குடிபோதையில் இரண்டு இளைஞர்கள் அதிவேகத்தில் கே.டி.எம். பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலை தடுப்புச்சுவற்றில் பைக் மோதி சினிமாவை மிஞ்சும் அளவுக்கு 20 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 

Youths Dead

இந்த சம்பவம் தொடர்பாக அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி! நடந்தது என்ன?
 

Tap to resize

Police investigation

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு (24), பம்மலை சேர்ந்த கோகுல் (24) என்பதும் தெரியவந்தது. 

இதையும் படிங்க:  ஜாக்பாட்! பொங்கல் முந்தைய நாளும் லீவு! பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை!

Chennai Road Accident

இருவரும் நண்பர் வீட்டில் நடந்த பார்ட்டியில் பங்கேற்றுவிட்டு அதிகாலை 4 மணிக்கு மீண்டும் மது பாட்டில் வாங்கிக்கொண்டு திரும்பும் போது விபத்து நடந்துள்ளது. இதில் கோகுல் என்ற இளைஞர் தலை தனியே துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த இருவரும் ஹெட்மேட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!