கொங்கு பிரியாணி முதல் மதுரை கறி தோசை வரை கமகமக்கும் உணவு திருவிழா: வெறும் ரூ.20 முதல்

Published : Dec 21, 2024, 08:43 AM IST

சென்னை மெரினா உணவுத் திருவிழா நேற்று மாலை தொடங்கப்பட்டுள்ள நிலையில் இன்றும், நாளையும் சென்னை மக்களுக்கு இந்த வார இறுதி நாட்கள் சிறந்த வீக் எண்ட் விருந்தாக அமையும் என்று கருதப்படுகிறது.

PREV
15
கொங்கு பிரியாணி முதல் மதுரை கறி தோசை வரை கமகமக்கும் உணவு திருவிழா: வெறும் ரூ.20 முதல்
Food Festival

சென்னை மெரினா கடற்கரையில் வார இறுதி நாட்களை வண்ணமயமாக்கும் வகையில் சுவையான உணவுத் திருவிழா நேற்று மாலைத் தொடங்கி உள்ளது. தமிழக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த திருவிழாவைத் தொடங்கி வைத்துள்ளார். 

25
Food Festival

தொடக்க நாளான நேற்று மட்டும் திருவிழா மாலை 4 மணிக்குத் தொடங்கியது. மற்றபடி உணவுத் திருவிழா நடைபெறும் வரும் 24ம் தேதி வரை உணவுத் திருவிழா பகல் 12.30 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
Food Festival

நாவை சுண்டி இழுக்கும் 100க்கும் மேற்பட்ட உணவுகள்

தமிழகத்தில் நாம் வடமாவட்டத்திலோ, தென் மாவட்டத்திலோ, கொங்கு மண்டலத்திலோ என எந்த பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் குறிப்பிட்ட சுற்றளவில் உள்ள உணவை மட்டுமே நாம் சுவைத்திருப்போம். ஆனால் இந்த உணவுத் திருவிழாவில் திருநெல்வேலி அல்வா முதல் மணப்பாறை முறுக்கு வரை, கொங்கு மட்டன் பிரியாணி முதல் மதுரை கறிதோசை வரை என அனைத்து பகுதிகளையும் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட உணவுகள் இடம் பெற்றுள்ளன.

45
Food Festival

அனுமதி இலவசம்

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ருசியான உணவை சுவைக்க சென்னை மக்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். மேலும் வீக் எண்டை கொண்டாட இந்த உணவுத் திருவிழா சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. இந்த திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

55
Food Festival

விலை

இந்த திருவிழாவில் பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் உணவு வகைகள் வெறும் 20 ரூபாய் முதல் தொடங்குகிறது. குறிப்பாக மாவட்ட வாரியாக உணவுப்பட்டியல் தயாரிக்கப்பட்டு விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வு மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories