தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையில் இருந்து பறந்த முக்கிய உத்தரவு!

Published : Dec 22, 2024, 05:24 PM ISTUpdated : Dec 22, 2024, 05:27 PM IST

School Education Department: தமிழக அரசுப் பள்ளிகளில் இணைய வேகம் குறைவாக இருப்பதால், 100 எம்பிபிஎஸ் வேக பிராட்பேண்ட் இணைப்பு ரூ.1,500க்குள் பிஎஸ்என்எல் மூலம் நிறுவ பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

PREV
15
தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையில் இருந்து பறந்த முக்கிய உத்தரவு!
Government School Student

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களில் கற்றல், கற்பித்தல் பணிக்காக 10 முதல் 20 கணினிகள் மற்றும் புரொஜெக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை ஒருங்கிணைந்த பிராட்பேண்ட் இணைய சேவை மூலம் இணைக்கப்பட்டிருந்தது. 

25
School Student

ஆனால், அந்த சேவையில் இணைய வேகம் குறைவு என்பதால் ஆய்வகங்களின் பயன்பாடும் குறைந்தது. இதை சரிசெய்ய அரசுப் பள்ளிகளில் 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணையதள சேவையை அமைத்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியது. இதுதவிர மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 28,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. 

35
BSNL Broadband

இதற்காக அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த பள்ளிகளிலும் 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் ரூ.1,500 கட்டணத்துக்குள் நிறுவிக் கொள்ளலாம். குறிப்பாக அரசு பள்ளிகளில் இணையதள இணைப்பு வசதிகளை பிஎஸ்என்எல் வாயிலாக மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 
45
School Education Department

55
Anbil Mahesh

ஆனால், இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தமிழ்நாட்டில் எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும், இணையதள இணைப்பு கட்டணம் நிலுவையில் இல்லை. கடந்த மார்ச் முதல் இதுவரை ரூ.2,151 கோடியை மத்திய அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்காமல் உள்ளது. ஆனாலும் மாநில நிதியிலிருந்து ஆசிரியர்களின் ஊதியம் முதல் கட்டணங்கள் வரை அனைத்தையும் நிலுவை இல்லாமல் செலுத்தியுள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories