கொடநாடு பங்களாவில் தாம் தொடர்புடைய ஆவணங்களை எடப்பாடி பழனிசாமி தேடியதாக சொன்ன கருத்துக்கு டிடிவி தினகரனுக்கு மனநலம் பாதித்துவிட்டதாக ஆர்.பி.உதயகுமார் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “கொடநாடு பங்களாவில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாம் தொடர்புடைய ஆவணங்கள் இருப்பதாக தேடிப் பார்த்தார். ஆனால் அதனை நாங்கள் ஏற்கனவே கிழித்து அழித்துவிட்டோம் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
24
தினகரனுக்கு மனநலம் பாதிப்பு..
இந்நிலையில் தினகரனின் கருத்துக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் காட்டமாக பதில் அளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார் பேசுகையில், “உனக்கென்னப்பா பைத்தியம் என்னவேண்டுமானாலும் பேசலாம் என்று கிராமங்களில் பேசுவார்கள். அது போல தான் டிடிவி தினகரனின் பேச்சும் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுக.வில் இருந்து அவரை 10 ஆண்டுகள் நீக்கி வைத்திருந்ததால் அவருக்கு மனநலம் பாதித்துவிட்டதோ என்ற கவலை எங்களுக்கு எழுந்துள்ளது.
34
உளவுத்துறை அளித்த அறிக்கையை கிழித்தீர்களா..?
கொடநாடு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது சட்டசபையில் நீண்ட விவாதம் நடைபெற்று அவை அனைத்தும் சட்டமன்ற அவைக்குறிப்பில் உள்ளது. உளவுத்துறை அளித்த ரிபோர்ட்களை படித்து கிழித்துவிட்டதாக உதமபுத்திரன் போல் பேசுகிறார்.
டிடிவி தினகரன் அமமுகவைத் தொடங்கிய போது உங்களுடன் எத்தனைபேர் இருந்தார்கள். புதிதாக கட்சி தொடங்கப்பட்ட பின்னர் எத்தனைபேரை நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக்கி இருக்கிறீர்கள். கட்சி தொடங்கி 18 பேரை தெருவில் நிறுத்தி இருக்கிறீர்கள். தற்போது வரை உங்களிடம் இருந்து ஒவ்வொருவராக விலகிக்கொண்டே இருக்கிறார்களே அது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.