வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் நவம்பர் 14 மற்றும் 19 ஆம் தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழைக்கு பெய்யு.
தென் கிழக்கு பருவமழையை விட தமிழகத்தில் அதிக மழை பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் நீர் நிலைகளின் நீர்மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தது.
24
வாட்டி எடுத்த வெயில்
இதனையடுத்து மழைக்கு கொஞ்சம் நேரம் ரெஸ்ட் கொடுக்கப்பட்டு எதிர்பாராத விதமாக கடந்த நான்கு நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சும் நிலையில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
34
இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமா நவம்பர் 14ஆம் தேதிவாக்கில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், நவம்பர்19ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தத் தேதிகளையொட்டி தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.