விஜய் கட்சி வேட்பாளர்களை 2 கோடி கொடுத்து புள்ள புடிக்கிற மாதிரி தூக்கிடும் திமுக- அதிமுக..! ஒரு சீட்டு ஜெயிப்பது கூட கஷ்டம் பாண்டே ஆருடம்

Published : Nov 07, 2025, 01:31 PM IST

2026 சட்டமன்றத்தேர்தலில் தவெக தான் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் சொல்லி வரும் நிலையில் மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே இது தொடர்பான கள எதார்த்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

PREV
16
2026ல் தவெக வெற்றி..?

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிலைப்படுத்தி நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தைத் தொடங்கினார். விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொண்டார். ஆனால் கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனிடையே அண்மையில் நடைபெற்ற கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெறுவது உறுதி என விஜய்யும் நம்பிக்கை தெரிவித்தார்.

26
யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாம்

இந்நிலையில் மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தமிழகத்தில் நிலவும் கள எதார்த்தம் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “வாக்களிக்க உரிமையுள்ள யார் வேண்டுமானாலும் பதவி மீது ஆசைப்படலாம். அந்த வகையில் தான் விஜய்யும் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார். முதல்வர் பதவி மீது ஆசைப்படலாம். ஆனால் அது சாத்தியமாகுமா என்பது மிகப்பெரிய கேள்வி. அதுவும் 2026 தேர்தலில் விஜய் முதல்வராவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

36
TVK Vs DMK பிம்பத்தை கட்டமைக்கும் விஜய்

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக, திமுக இடையே தான் போட்டி என்ற பிம்பத்தை கட்டமைக்க விஜய் முயல்கிறார். இது அவரது தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக மட்டுமே. இந்த கருத்தையும் விஜய் டிசம்பர், ஜனவரி வரை தான் பேச முடியும். அதையும் தாண்டி இது உண்மை என நினைத்து அவர் பேசினால், அவரே அவரை ஏமாற்றுவதாக அர்த்தம். அவரிடம் நல்ல டீம் உள்ளது. தற்போது வரை அவருக்கு சாதகமாக தான் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அவரது அணியில் உள்ள பிறர் அவரை தவறுதலாக வழிநடத்தினாலும் அதனை விஜய் உடனடியாக புரிந்துகொள்ளும் நிலையில் இருக்கிறார்.

46
விஜய் வெற்றிபெறுவதே கடினம்

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தனித்து நின்றால் அவரால் 10 எம்எல்ஏகள் அல்ல, ஒன்றிரண்டு உறுப்பினர்கள் வருவதே கடினம். குறிப்பாக விஜய்யே வெற்றி பெறுவாரா என்பது, எதிர் தரப்பில் போட்டியிடும் போட்டியாளரைப் பொறுத்து தான் அமையும். வெற்றி பெறலாம், பெறாமலும் போகலாம். உறுதியாக எதையும் சொல்ல முடியாது.

56
அதிமுக கூட்டணியில் தவெக..?

விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் 25 சதவீதம் வரை வாக்குகளைப் பெறலாம். அது ஒரு நல்ல நிலை. அதே நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு செல்லும் பட்சத்தில் தவெக 50 இடங்களில் போட்டியிட்டால் நிச்சயம் 40 இடங்களில் வெற்றி பெறுவார். தனித்து நின்றால் எதுவும் செய்ய முடியாது என்பது அவருக்கே தெரியும். மேலும் இது தற்போது அக்கட்சியின் கடைநிலை தொண்டர்களுக்கும் தெரிந்துவிட்டது. நம்மால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

66
புள்ள புடிக்குற மாதிரி வேட்பாளர்களை தூக்கிடுவாங்க..

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நியமிப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதில் குறைந்தபட்சம் 34 வேட்பாளர்களாவது வேறு கட்சிகளுக்கு சென்றுவிடுவார்கள். கேப்டன் விஜயகாந்த் கட்சியிலேயே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் சுமார் 20 வேட்பாளர்கள் மாற்று கட்சியினரால் வாங்கப்பட்டார்கள். அந்த வகையில் தவெகவில் 50 வேட்பாளர்கள் வரை பிற கட்சிகள் வாங்கிவிடும். இப்படிப்பட்ட வேலையை செய்வதில் திமுகவும், அதிமுகவும் கில்லாடிகள். அவர்கள் ஒவ்வொரு வேட்பாளரையும் உடனடியாக ரூ.2 கோடி வரை கொடுத்து வாங்கிவிடுவார்கள்.

விஜய்க்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. அது ஓட்டாகவும் மாற வாய்ப்பு உள்ளது. ஆனால் அது ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியை பெற்றுத்தரும் அளவிற்கு இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories