பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அன்புமணியின் தலைமைப் பண்பை கேள்விக்குள்ளாக்கிய ராமதாஸ், அவரது செயல்பாடுகளால் மனவேதனை அடைந்ததாகவும் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி இடையான மோதல் முடிவுக்கு வரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு. புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில் மேடை நாகரீகம் இல்லாமல் செயல்பட்டது யார்?
25
அன்புமணி மீது குற்றச்சாட்டு
எனக்கும், அன்புமணிக்கும் உதவியாக இருக்கவே முகந்தனை நியமனம் செய்தேன். முகந்தனை இளைஞரணி செயலாளராக நியமித்த போது மேடையிலேயே மைக்கை தூக்கி வீசியது சரியாக செயலா? அன்புமணி மைக்கை டேபிளில் வீசியது, என் தலையில் வீசியது போல் இருந்தது. அன்புமணியின் செயல் வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல் இருந்தது. அன்புமணிக்கு தலைமைப் பண்பு கொஞ்சம் கூட இல்லை. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 பேர் மட்டுமே கலந்த கொண்டபோதே நான் செத்து போய்விட்டேன் வேதனையுடன் ராமதாஸ் கூறியிருந்தார்.
35
அன்புமணி ராமதாஸ் ஆலோசனை
இந்நிலையில் ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் திருமண மண்டபம் ஒன்றில் பாமகவின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் 3 நாட்கள் ஆலோசனைக் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 மாவட்டச் செயலாளர்கள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்து பாமகவில் என்ன நடுக்குமோ என அக்கட்சியின் தொண்டர்களை கவலை அடைய செய்துள்ளது.
இந்தநிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் இன்று கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
55
ராமதாஸின் உயிருக்கு ஆபத்து
முன்னதாக ராமதாஸின் உயிருக்கு அன்புமணியின் குடும்பத்தால் ஆபத்து உள்ளது என்று மறைந்த வன்னியர் சங்கத்தின் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரான வி.ஜி.கே.மணிகண்டன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.