இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு அதாவது காலை 10 மணிவரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கும், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.