அன்புமணியின் தலைவர் பதவிக்கு ஆப்பு வைக்கும் ராமதாஸ்; தேர்தல் ஆணையம் வரை சென்ற பஞ்சாயத்து

Published : Aug 13, 2025, 08:47 AM IST

அண்மையில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியின் பதவி காலத்தை மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் முறையீடு.

PREV
13
தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட ராமதாஸ்

பாமக.வில் தந்தை, மகன் இடையேயான பிரச்சினை தற்போது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது. அண்மையில் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணியின் தலைவர் பதவி மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாகக் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவர் பதவியை நீட்டிப்பது உட்பட 14 தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

23
நிறுவனர் இல்லாத பொதுக்குழு கூட்டம்

இந்நிலையில், அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், கட்சியின் விதிப்படி நிறுனர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். ஆனால் இந்த பொதுக்குழுவில் நிறுவனருக்கு அழைப்பு கூட விடுக்கப்படவில்லை.

33
அன்புமணியின் தலைவர் பதவி செல்லாது?

நிறுவனரால் கூட்டப்படாத இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது, மேலும் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தலைவர் பதவிக்கான நீட்டிப்பும் செல்லுபடியாகாது. இந்த செயலில் ஈடுபட்ட அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories