தமிழக அரசு வேலைவாய்ப்பிற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தொழில் தொடங்கவும் சொந்தமாக முன்னேறவும் கடன் உதவி திட்டங்கள், மானிய உதவிகள், இலவச உதவிகள் வழங்கி வருகிறது. இதன் படி, தமிழக அரசு, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள்,
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் சமூக ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கி வருகிறது. இத்திட்டம் சுயவேலைவாய்ப்பு மற்றும் நிலையான வருமானத்தை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.