இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வந்து கலை, கலாச்சார பண்பாட்டு மையத்தை பார்த்து விட்டு சாமியை தரிசனம் செய்தார். நல்ல மாவட்டமான அரியலூர் பின் தங்கி உள்ளது. ஆட்சியாளர்கள் ஏதோ காரணமாக அரியலூர் மாவட்டத்தில் தனி கவனம் செலுத்தவில்லை. பிரதமரின் வருகையால் அரியலூர் பெருமை தமிழகத்தின் பெருமையாக பார்க்கிறோம். சோழபுரம் ஊரின் நிலைமை மாறும். 1025ல் கட்டப்பட்ட சோழபுரம் கோவில் 250 ஆண்டுகளுக்கு விளங்கிய நகரம். தற்போது பிரதமரின் வருகைக்கு பின் மைய புள்ளியாக உள்ளது. இனி ஆன்மீக பக்தர்கள் அதிகமாக வருவார்கள். பொருளாதாரம் உயரம். ஒட்டல்கள், சுற்றுலா நிறைய உயரும். இது அரியலூர் மாவட்டத்திற்கு பெருமையாக பார்க்கிறோம். உலகத்தின் 4வது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். வாரணாசி எம்.பியாக பிரதமர் உள்ளது. காசி தீர்த்ததுடன் கோவிலுக்கு வந்தார்கள். கங்கையும், காவிரியும் கலப்பதாக பார்க்கிறேன்.