Published : Jul 28, 2025, 09:45 AM ISTUpdated : Jul 28, 2025, 09:47 AM IST
நடிகர் மன்சூர் அலிகானின் மகன் மீது 35 லட்ச ரூபாய் கடன் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 67 வயது முதியவர் ஒருவரை மிரட்டியதாக புகார் எழுந்ததை அடுத்து, மன்சூர் அலிகான் தனது மகன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் பல்வேறு திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். பல்வேறு சர்ச்சையான கருத்திற்கு சொந்தக்காரரான மன்சூர் அலிகான் தற்போது தனது மகன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளார். நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கடந்த ஆண்டு போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படார்.
கஞ்சா மற்றும் மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப்பொருட்களை ஆன்லைனில் வாங்கி விற்பனை செய்ததாகவும், பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஜனவரி 2025இல் சென்னை உயர்நீதிமன்றம் அலிகான் துக்ளக்குக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
24
மன்சூர் அலிகான் மகன் மீது வழக்கு
இந்த நிலையில் சென்னையில் 35 லட்சம் ரூபாய் கடன் தொடர்பாக 67 வயது முதியவர் ஒருவரை மிரட்டியதாக புகாரை தொடர்ந்து மன்சூர் அலிகானின் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒருத்தன் ஆறு வருசமா 35 லட்சம் பணம் வாங்கீட்டு இடத்த Aggrement போட்டுட்டு இன்னொருத்தருக்கு வித்துட்டு பணத்த திருப்பி தராம , கேட்க போனா கீழே ரோட்ல நின்று போன் தான் பண்ணீருக்கான். அப்பா பணம் கேட்டாங்கன்னு! இந்தா கீழே வாரேன் பணம் எடுத்துட்டு வாரேன்ன்னு சொல்லிட்டு 100க்கு போன் போட்டு போலீஸ வரவர வழைச்சு இருக்கான். இதுதான் நடந்தது.
34
என் மகன் மிரட்டவில்லை- மன்சூர்
ஒரு ஆளயும். கூட்டிட்டு போகல நேர்ல பாக்க கூட இல்ல! அதுக்கு என் பையன் மேல F.I.R. போடுவாங்களா? 100க்கு போன் பண்ணீட்டா உடனே. F.I.R. போடுவாங்களா? மன்சூர் அலிகான் பேரை கெடுக்கனும், அவன் முன்னேறவ கூடாதா? என் பேரை வச்சு இந்த போலீஸ் புகழ் அடையனுமா... எவ்வளவு காலத்துக்கு இப்படியே என்ன அவமானப் படுத்துவாங்க? கேட்டா முதியவரை என் பையன் மிரட்டுனார்னு செய்தி போடறான்.
பணம் வாங்கி ஆறு வருசமா Rotation பண்ணி சம்பாதிக்கையில அவரு குமரனா இருந்தாரா? அந்த ஆளு மேல R.8. வடபழனி ஸ்டேசன்ல 5 வருசமா இப்படி மோசடி பண்ணீட்டாங்க! அவர் மேல FIR போடுங்கன்னா ஒரு C.S.R. காப்பி குடுங்கன்னா நாயா அலஞ்சும் ஒரு நடவடிக்கையியும் எடுக்கல காச வாங்கிட்டு வுட்டராங்க.
ஒரு போன்ல பணம் தாரேன்று சொன்னீங்களே! கீழே வந்திருக்கேன்னு சொன்னதுக்கு அவன் மேல உடனே F.I.R. இத நான் விட மாட்டேன். 10.30 மணி காலைல D.I. Police Station க்கு வாங்க! Call all media please F 1.R. வாபஸ் வாங்கலேனா நான். தர்ணா பண்ண போறேன். ஏதோ 2 பேர் கஞ்சா குடுத்து அடிச்சான்ங்கிறதுக்காக நானே! அடிச்சு போலீஸ்ட்ட அனுப்பி வச்சேன். தப்பு பண்ணனான் சரி.. இப்ப அப்பாவுக்கு உதவி பண்ண தங்கச்சிகளுக்கு கல்யாணம் இருக்கே!
எனக்காக வாழ்க்கையில ஒரே ஒரு வேல செய்யப்போனதுக்கு இப்படி என் பேரை இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் உள்நோக்கத்தோட மானபங்க படுத்தியிருக்கு, சில பத்திரிக்கை ARREST டுன்னே போடுது. Ins. பெக்டர்ட கேட் (A.Additional தான் போடச் சொன்னாருங்க ராறு. என் பேரு விஜயகாந்து எனக்கு நீங்க கட்டுபட்டுத் தான் ஆகனும்னு சொன்னாரு! என மன்சூர் அலிகான் அந்த அறிகையில் கூறியுள்ளார்.