கைவிட்ட நீதிமன்றம்! அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ கைது பயந்து எஸ்கேப்! சல்லடைப்போட்டு தேடும் போலீஸ்!

Published : Jun 28, 2025, 11:33 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் தொடங்கி சகோதரர் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

PREV
14

திருவள்ளூர் மாவட்டம் நான் காடு பகுதியில் வசித்து வருபவர் தனுஷ். இவருக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயா ஸ்ரீ என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் போனில் பேசி வந்துள்ளன. ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய உள்ளது. இந்நிலையில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடி வந்த நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

24

இதுதொடர்பான வழக்கில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர் விசாரணைக்கு ஆஜரானார். இந்தநிலையில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் கோரி மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பூவை ஜெகன் மூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிறுவன் கடத்தலுக்கும் பூவை ஜெகன்மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் பலரும் உதவி கேட்பார்கள். அந்த வகையில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய மகேஸ்வரி கேட்ட உதவிக்கு, எதுவாக இருந்தாலும் சட்டப்படி செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார். எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

34

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிறுவன் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது பூவை ஜெகன் மூர்த்தி தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியது உள்ளது. முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார். மேலும் அவருக்கும் ஏடிஜிபி ஜெயராமுக்கும் இடையிலான தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

44

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், முன் ஜாமீன் கேட்ட பூவை ஜெகன் மூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜெகன் மூர்த்தி தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை பிடிக்க திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரத்தில் நான்கு தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories