மாணவர்களின் நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பள்ளிகளில் 'வாட்டர் பெல்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், குறிப்பிட்ட நேரங்களில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க ஊக்குவிக்கப்படுவார்கள்.
கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பள்ளிக்கு சென்று வருகிறார்கள். அந்த வகையில் காலையில் பள்ளிக்கு கொண்டு செல்லும் தண்ணீர் முழுவதுமாக பாட்டில் மாலையில் வீடு திரும்பும் போதும் பாதியளவு கூட குறையாமல் இருக்கும். இது தொடர்பாக மாணவர்கள் கூறுகையில் தண்ணீர் குடிக்க நேரம் இல்லை.
தண்ணீர் குடிக்க அனுமதியில்லையென கூறுவார்கள். இதன் காரணமாக மாணவர்களுக்கு தண்ணீர் சத்து பெரும் அளவில் குறைந்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உடலில் நீர்ச்சத்து குறைவதால், சோர்வு, தலைவலி, மயக்கம் மற்றும் கவனக்குறைவு ஏற்படுகிறது.கடுமையான நீரிழப்பு சிறுநீரகப் பிரச்சனைகளையும் ஏற்படும் நிலையும் உருவாகிறது.
25
நீர் சத்து குறைபாடால் ஏற்படும் பாதிப்பு
மூளையின் செயல்பாட்டிற்கு நீர் மிகவும் அவசியம். நீரிழப்பு மாணவர்களின் ஒருமுகப்படுத்துதல், நினைவாற்றல் மற்றும் புரிந்துகொள்ளும் திறனைக் குறைக்கும் நிலையும் உருவாகி வருகிறது. செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் மற்றும் சோர்வு போன்றவை ஏற்படுகிறது. போதுமான தண்ணீர் இல்லாதபோது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து அடிக்கடி நோய்கள் தாக்க வாய்ப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள மாணவர்கள் தினமும் 1.5 முதல் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பள்ளிகளில் தண்ணீர் குடிக்க ஊக்குவிக்க, குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் பள்ளி மாணவர்களுக்கு "வாட்டர் பெல்" நேரம் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளும், மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக, வாட்டர் பெல் என்ற பெயரில் பின்வரும் செயல் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
35
பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்
தண்ணீர் குடிப்பதால் கவனத்தை மேம்படுத்துகிறது, மாணவர்கள் வகுப்பில் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க உதவுகிறது. நீரிழப்பு அறிவாற்றல் செயல்திறனைக் குறைக்கும் நிலை உருவாகும். நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மூளை சுமார் 75% நீரால் ஆனது, மேலும் சரியான அளவு தண்ணீர் குடிப்பதால் அதன் செயல்பாட்டை சீராக்கிறது.
நீர் உடல் அமைப்புகளை சீராக்கிறது., மாணவர்களை உற்சாகமாக வைத்திருக்கிறது மற்றும் சோர்வைத் தடுக்கிறது. தலைவலி மற்றும் சோர்வு ஆகியவை நீரிழப்பின் பொதுவான அறிகுறிகளாக உள்ளது. எனவே பள்ளி நேரங்களில் தண்ணீர் குடிப்பது இந்தப் பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது மற்றும் மாணவர்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது. பள்ளிகளில் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிப்பது, மாணவர்கள் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நல்ல சுகாதாரப் பழக்கங்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறது,
எனவே அனைத்து மாணவர்களும் தங்கள் வீட்டிலிருந்து தண்ணீருடன் அல்லது இல்லாமல் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு வர அறிவுறுத்தப்பட வேண்டும். பள்ளி காலை பிரார்த்தனையில், தண்ணீர் குடிப்பதன் முக்கியத்துவம் மாணவர்களுக்கு சரியான முறையில் விளக்கப்பட வேண்டும். வழக்கமான மணி சத்தத்தில் இருந்து வேறுபட்ட ஒரு மணியைப் பயன்படுத்தி, பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும், தண்ணீர் குடிப்பதற்காக மணியின் சத்தம் கேட்கும்போது, அவர்களின் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்க அறிவுறுத்த வேண்டும்.
55
தண்ணீர் குடிக்க 3 நிமிடங்கள் ஒதுக்கீடு
தண்ணீர் மணியை அடிக்க வேண்டிய நேரம் காலை 11.00 மணி (இடைவெளி), மதியம் 1 மணி (மதிய உணவு நேரத்தில்) மற்றும் பிற்பகல் 3.00 மணி (இடைவெளி) என பள்ளி வசதிக்கேற்ப இருக்கலாம் (வழக்கமான இடைவேளை நேரங்களுடன் ஒத்துப்போகலாம்). அதே நேரம் இது சம்பந்தமாக, எந்த மாணவரும் தண்ணீருக்காக வகுப்பிற்கு வெளியே செல்லக்கூடாது, மேலும் வகுப்பு சூழலுக்கு இடையூறு விளைவிக்காமல் மாணவர்கள் தண்ணீர் குடிக்க ஆசிரியர் 2-3 நிமிடங்கள் வழங்க வேண்டும். பள்ளிகளில் தண்ணீர் வசதியை பராமரிக்கவும், மாணவர்கள் பள்ளியில் தண்ணீர் குடிப்பதை கண்காணிக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து தலைமைக் கல்வி அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.