எடப்பாடி பழனிசாமியின் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்டோம்" பிரச்சாரத்தின் தொடக்க நிகழ்ச்சியை மேட்டூரில் செங்கோட்டையன் புறக்கணித்தார். அடுத்தாக எடப்பாடியின் கொங்கு பகுதி சுற்றுப்பயணத்தின்போது, செங்கோட்டையனின் ஈரோடு பகுதியைத் தவிர்த்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அதிமுகவில் இருந்து விலகிய வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம் போன்றோரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தினார். "அனைவரும் ஒன்றுபட்டால் 2026 தேர்தலில் வெற்றி பெறலாம்" என்று அவர் கூறினார். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு விதித்தார்.